The Nattukkottai Chettiar Thendayuthapani Temple in Alor Setar, Malaysia, is a significant Lord Murugan shrine built by the Tamil Chettiar community, known for its traditional Tamil architecture, colorful gopuram, and vibrant festivals, serving as a spiritual hub for Hindus in Kedah
Events / AlorSetar
அலோர்ஸ்டார், ஜாலான் புத்ரா, எண் 2ஏ, என்ற இடத்தில் சுமார் 2 ஏக்கர் நிலப் பரப்பில், அலோர்ஸ்டார் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் பிராமதீச ஆண்டில் – 1913ல் தோன்றியது.
அந்நாளில் 1903-ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் தமிழகத்திலிருந்து தகைசார்ந்த மலேசிய நாட்டுக்கு வருகை தந்த தனவணிகர்களாகிய நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள், கடாரம் என்னும் கவின் மிகுந்தகிட்டா மாநிலத் தலைநகரான அலோர்ஸ்டாரில், ஜாலான் புத்ரா எண் 2ஏ, என்ற நகர்மைய இடத்தில் 1913-ஆம் ஆண்டில் மேன்மை மிக்க அறிவின் சின்னமான வடிவேலை நிறுவி சிறுகோயிலாக அமைத்து அதனை அருள்மிகு தண்டாயுதபாணியாகப் பரிவுடன் பரவி வந்தார்கள். பின்னால் அதே இடத்தில் 1916-ஆம் ஆண்டில் புதிதாகச் சற்று பெரிய திருக்கோயில் கட்டி, அதில் விநாயகர், தண்டாயுதபாணி, மயில், பலிபீடம் ஆகியவற்றை அழகுக் கற்சிலைகளாக நிறுவி, இடும்பனை வேலாக அமைத்து, நடராசப் பெருமானைப் படமாக வைத்து முதல் மங்கலத் திருக்குட நீராட்டுச் செய்து அன்று முதல் சிறப்பாக வழிபாடு செய்து வந்தார்கள்.
முதல் மங்கலத் திருக்குட நீராட்டை முதல் உலக மகா யுத்தம் நிகழும் முன்பு தற்செயலாக நிகழ்த்தத் திட்டமிட்டு, தமிழகத்திலிருந்து அருள்மிகு தண்டாயுதபாணியின் கருங்கற்சிலை செய்து இங்கு வரவழைக்க எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பெற்றது. அதன்படிசெய்யப்பெற்ற அந்தக் கருங்கற் சிலை சென்னையிலிருந்து கப்பலில் ஏற்றப்பெற்று இங்கு வந்து சேருவதற்குள் மேற்படி உலக மகாயுத்தம் மூண்டதால், அந்தக் கப்பல் ஏடன் வழியாக இலண்டன் நகர் சென்று சேர்ந்து, அங்கு அச்சிலை இறக்கிவைக்கப்பெற்று சில ஆண்டுகள் அங்கு தங்கிய பின்பு, உலக மகாயுத்தம் முடிந்து சமாதானம் ஆன பிறகு அது மற்றொரு கப்பல் வழியே வந்து பின்பு அலோர்ஸ்டார் வந்து சேர்ந்ததாம். அதன் பிறகுதான் அந்தத் தண்டாயுதபாணி சிலையைப் புதிதாகக் கட்டிய கோயிலில் நிறுவி முதல் திருக்குட நீராட்டு நடைபெற்றது. இச்செய்தி அறிந்தவர்கள் அலோர்ஸ்டார் தண்டாயுதபாணியை இலண்டன் மாநகர் சென்று வந்த தண்டாயுதபாணி என்று பெருமையாகப் பேசுவார்கள்.
அன்று கட்டிய அந்தத் திருக்கோயில் பற்பல ஆண்டுகளுக்குப் பின்னால் சற்று அகலமான நிலையில் அதே இடத்தில் வேறு பெரிய கோயில் கட்டத் திட்டமிட்டு அற்புதமான அழகுச் சிலைகள் அமைந்த விமானத்துடன் கூடிய புதிய திருக்கோயில் கட்டப்பெற்று அதில் கோயில் கொண்டருளும் அருள்மிகு ஆனைமுகப் பெருமானுக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமிக்கும் சென்ற பிங்கள ஆண்டு பங்குனித் திங்கள் 2-ஆம் நாள் (15-3-1978) இரண்டாவது மங்கலப் பெருந்திருக்குட நீராட்டு நிகழ்ந்தது. புதிய திருக்கோயில் 120 அடி நீளமும் 40 அடி அகலமும் கொண்ட நிலப்பரப்பில் அமைந்துள்ளது, கோயில் உள்பட அதில் அமைந்துள்ள மகா மண்டபம் இடையில் தூண்கள் நின்று விளங்குவது ஒரு தனிச்சிறப்பாகும்.
Those who are interested in walking can contact
Dr. KMS.Ramasamy +60124126594
Dr. RM.Nachammai +65 8189 1024
RM.Chockalingam +60124936492
R.Murlinathan +60195181413
We are dedicated to guiding and uniting the devotees who embark on the divine journey Pathayathirai towards the holy feet of Lord Murugan.
+91 94866 82316
info@pathayathirai.com
Sivan Kovil, Devakottai, TN